உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தலைவருக்கு வைத்த குறியில் கொத்தாக மடிந்த பயங்கரவாதிகள் Hezbollah| top commander ali karaki

தலைவருக்கு வைத்த குறியில் கொத்தாக மடிந்த பயங்கரவாதிகள் Hezbollah| top commander ali karaki

தலைவருக்கு வைத்த குறியில் கொத்தாக மடிந்த பயங்கரவாதிகள் Hezbollah| top commander ali karaki| israeli airstrike ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் படை தளபதிகள், முக்கிய தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த தாக்குதலில் அடுத்தடுத்து ஒவ்வொரு தலைகளை ஹிஸ்புல்லா இழந்து வருகிறது. பெய்ரூட்டில் அடுக்குமாடி கட்டடத்தின் அடிப்பகுதியில் செயல்பட்டு வந்த தலைமையகத்தில் வெள்ளியன்று ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார் அவரை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் கமாண்டர் அலி கராக்கியும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. இதனை ஹிஸ்புல்லாவும் உறுதி செய்துள்ளது. லெபனான் தெற்கு பகுதியில் ஹிஸ்புல்லாவை வழிநடத்தியவர் தான் அலி கராக்கி. லெபனான் உள்நாட்டு போரின்போது இந்த அமைப்பில் சேர்ந்தார். பின், ஹிஸ்புல்லாவின் உச்சபட்ச அமைப்பான ஜிகாத் கவுன்சில் உறுப்பினர் ஆனவர். கடந்த பிப்ரவரியில் இவரது கார் மீது குண்டு வீசி கொல்ல இஸ்ரேல் முயன்றது. ஆனால், காரில் அவர் இல்லாததால் உயிர் தப்பினார். இதே போல் ஹிஸ்புல்லா பாதுகாப்பு பிரிவின் தளபதியும், செயற்குழு உறுப்பினருமான நபில் கவுக் என்பவரும் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இவர் தெற்கு பகுதி தளபதியாக இருந்தவர். மூத்த தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என இஸ்ரேல் கூறியது. ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், நஸ்ரல்லாவுடன் சேர்ந்து பல்வேறு ரேங்கில் உள்ள 20க்கு மேற்பட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா பயங்கரவாத தளபதிகளை அழிக்கும் வரை தாக்குதலை தொடர்வோம் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

செப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி