உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விடியலின் அர்த்தம் இன்று புரிந்து விட்டது! | Annamalai | TNBjp | DMK | Udayanidhi | Deputy CM

விடியலின் அர்த்தம் இன்று புரிந்து விட்டது! | Annamalai | TNBjp | DMK | Udayanidhi | Deputy CM

முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி துணை முதல்வர், செந்தில் பாலாஜி உட்பட 4 அமைச்சர்கள் பதவி ஏற்பு என தமிழக அரசியலில் இன்று நடந்த மாற்றம் பெரும் விவாதங்களை கிளப்பி உள்ளது. ஒரு பக்கம் ஜாமினில் வெளி வந்த மூன்றே நாளில் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆகி உள்ளார். அவர் வகித்த அதே துறையை ஒதுக்கப்பட்டு உள்ளது. மோசடி வழக்கில் விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில் அதிகாரம் கொடுத்துள்ளது பல விமர்சனங்களை சந்தித்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மூத்த அமைச்சர்கள் பலர் இருந்தும் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு, வாரிசு அரசியலை வெளிச்சம் போட்டு காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். துணை முதல்வர் உதயநிதி எனக்கு துணையாக அல்ல, நாட்டு மக்களுக்கு துணையாக இருக்க போகிறார் என ஸ்டாலின் கூறி உள்ளார். திமுகவின் விடியல் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை மக்கள் இன்று நன்றாக புரிந்து விட்டனர். விடியல் என்பது ஒரு குடும்பத்துக்கான விடியல், திமுக தலைவர்களுக்கான விடியல் என்பது தெளிவாகி விட்டது என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து உள்ளார்.

செப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை