உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்த சுவாரஸ்யம் CJI Chandrachud reprimand lawyer Don't Say Yeah

சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்த சுவாரஸ்யம் CJI Chandrachud reprimand lawyer Don't Say Yeah

சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கறிஞர் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். நான் 2018 ல் ஒரு வழக்கு தொடர்ந்தேன். அப்போது நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் வழக்கை விசாரித்தார். எனக்கு நிவாரணம் வழங்காமல் மனுவை தள்ளுபடி செய்து விட்டார். தீர விசாரிக்காமல் மனுவை தள்ளுபடி செய்த ரஞ்சன் கோகாயை கோர்ட்டில் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என மனுவில் அந்த வழக்கறிஞர் கூறியிருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி DY டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. ஒரு நீதிபதியை பிரதிவாதியாக சேர்த்து எப்படி நீங்கள் வழக்கு தொடர முடியும்? நீதிபதி ரஞ்சன் கோகாய் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர். நீதிபதி பதவிக்கு என ஒரு மாண்பு இருக்கிறது. நீங்கள் போட்ட வழக்கில் வெற்றி கிடைக்கவில்லை என்பதற்காக அந்த நீதிபதியை விசாரிக்க வேண்டும் என பொதுநலன் வழக்கு தொடர முடியாது. நீங்கள் கேட்டதும் விசாரணை நடத்த உத்தரவிடவும் முடியாது. இதுபோன்ற விஷயங்களை கோர்ட் சகித்துக்கொள்ளாது என தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.

செப் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ