இஸ்ரேல் தாக்குதலை உலக நாடுகள் தடுக்கணும் iranian ambassador| hezbollah| israel attack
இஸ்ரேல் தாக்குதலை உலக நாடுகள் தடுக்கணும் iranian ambassador| hezbollah| israel attack லெபனானில் ஹிஸ்புல்லாக்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. சமீதத்தில் அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக, இந்தியாவுக்கான ஈரான் தூதர் டாக்டர் இராஜ் இலாஹி Dr Iraj Elahi கூறும்போது, ஹிஸ்புல்லா ஒரு பயங்கரவாத குழுவே அல்ல; அது ஒரு அரசியல் கட்சி. அவர்களின் படுகொலைகள், மக்கள் மீதான தாக்குதல்கள், பிராந்தியத்தில் அவர்களின் விரோதத்தை நியாயப்படுத்தவே ஹிஸ்புல்லாவை ஒரு பயங்கரவாத குழு என்று சொல்கிறார்கள் எனக்கூறினார். ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா சிறந்த அரசியல்வாதி, உலகம் அறியப்பட்ட அவரின் தியாகம் ஒரு சாதாரண விஷயமல்ல. அவரது இழப்பு, முஸ்லிம்கள், ஷியாக்கள், லெபனானியர்கள், அரேபியர்களுக்கு மட்டுமல்ல உலக மக்களுக்கே பெரிய இழப்பு. இஸ்ரேலின் படையெடுப்பு மற்றும் ராணுவ தாக்குதலை நிறுத்துவதுதான் முக்கிய தீர்வாக இருக்கும். இந்தியா மட்டுமின்றி அனைத்து நாடுகளும், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, பாஸ்தீனம் மற்றும் லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலை தடுத்து அமைதியை நிலைநிறுத்தும் என்று நம்புகிறோம் என ஈரான் தூதர் இராஜ் இலாஹி கூறினார். போரை நிறுத்துவதற்கான அழைப்பை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு ஏற்பாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த இலாஹி, மனிதாபிமான கோட்பாடுகள், சர்வதேச சட்டங்கள் மீது அவர்கள் சிறிதும் கவனம் செலுத்துவதில்லை என்பது தெரிகிறது. இந்த நாசிச ஆட்சிக்கு எதிராக லெபனான் நிலத்தை பாதுகாக்கும் தலைவராக நஸ்ரல்லா இருந்தார். இஸ்ரேலுக்கு நவீன ஆயுதங்களை வழங்கி ஆதரவு அளிக்கும் அமெரிக்கா கூட, போரை நிறுத்தி சொல்லியும், இஸ்ரேல் கேட்கவில்லையே என்றார். லெபனான் மீதான தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹுடன் பேசியது குறித்து கருத்து தெரிவித்த இலாஹி, இந்தியாவும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை போர் நிறுத்தம் தொடர்பாக அழைப்பு விடுத்துள்ளது. ஐநாவிலும் பேசியிருக்கிறது. மோடி என்ன பேசினார் என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனால், போர் நிறுத்தம் தொடர்பாகத்தான் அவர் பேசியிருப்பார் என நம்புகிறேன் என ஈரான் தூதர் இராஜ் இலாஹி கூறினார்.