பணமோசடி வழக்கில் ஸ்பெஷல் கோர்ட் அதிரடி | Special Court | Senthil Balaji
பணமோசடி வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆகி உள்ளார். திங்கள், வெள்ளி இரண்டு நாள் அமலாக்கதுறை ஆபீஸில் கையெழுத்து போட உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னும் பல கடும் நிபந்தனைகளுடன் தான் அவருக்கு ஜாமின் தரப்பட்டுள்ளது. செந்தில் மீது அமலாக்கதுறை வழக்குடன் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் பதிந்த பண மோசடி வழக்கும் நிலுவையில் உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில். அப்போது வேலை வாங்கி தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக செந்தில் உட்பட 48 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 மோசடி வழக்குகளை கடந்த 2015, 2017, 2018 ஆம் ஆண்டில் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகளில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்ற பத்திரிகையில் செந்தில் பாலாஜி உட்பட 2 ஆயிரத்து 202 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை ஸ்பெஷல் கோர்ட்டில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.