திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்த பவன் கல்யாண் பரபரப்பு பேட்டி Tirupati Laddu| TTD| Pawan Kalyan
திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்ததாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையானது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விரதம் மேற்கொண்டு ஏழுமலையானை தரிசிக்க உள்ளதாகக் கூறினார். விஜயவாடாவில் விரதத்தை துவக்கிய அவர், 3 நாள் பயணமாக செவ்வாயன்று திருப்பதி வந்தார். அங்கிருந்து புறப்பட்டு நடைபாதையாக திருமலைக்கு ஏறி சென்றார். இரவு அங்கு தங்கும் பவன், 2ம் தேதி காலை ஏழுமலையானை தரிசிக்கிறார். பின் அன்னப் பிரசாத மையத்தில் ஆய்வு செய்கிறார். இதற்கிடையே கலப்பட நெய் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சுப்ரீம் கோர்ட், இது குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு அவசரப்பட்டு மீடியாக்களில் வாய் திறந்தது ஏன் என கேள்வி எழுப்பியது. லட்டு பிரசாதம் கலப்படம் செய்த நெய்யில் தான் தயாரானது என உறுதியாகாத நிலையில், முதல்வர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் இப்படி பேசக்கூாடது. கடவுளை அரசியலுக்குள் இழுக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் கூறினர்.