உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அவ்வளவு தான் முடிச்சுவுட்டாங்க; கொத்தாக தூக்கிய போலீஸ் | Chennai | Parrot theft | Pet Shop

அவ்வளவு தான் முடிச்சுவுட்டாங்க; கொத்தாக தூக்கிய போலீஸ் | Chennai | Parrot theft | Pet Shop

அவ்வளவு தான் முடிச்சுவுட்டாங்க; கொத்தாக தூக்கிய போலீஸ் | Chennai | Parrot theft | Pet Shop சென்னை கொளத்தூர் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் அரவிந்த் ரமேஷ். வெளிநாட்டு பறவைகளை மொத்தமாக வாங்கி விற்கும் தொழில் செய்கிறார். கொளத்தூர் ஸ்கூல் ரோட்டில் கடை நடத்தி வருகிறார். இவர் செவ்வாயன்று மதியம் வெளியில் சாப்பிட சென்றிருந்தபோது ஆசாமிகள் கடைக்குள் நுழைந்துள்ளனர். விலை உயர்ந்த மூன்று கிளிகளை கூண்டோடு தூக்கி சென்றனர். கடையில் பொருத்தபட்டிருந்த சிசிடிவியில் திருடப்படும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இது குறித்து அரவிந்த் ரமேஷ் ராஜமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சென்னை பாடி அருகே வெளிநாட்டு கிளிகளை சிலர் விற்க முயற்சிப்பதாக தகவல் வந்தது. அவர்களது செல்போன் நம்பரை கண்டுபிடித்த அரவிந்த் ரமேஷ் கிளி வாங்கும் நபரை போல பேசினார். அம்பத்தூர் டெலிபோன் எக்ஜேஜ் அருகே கிளியுடன் வர சொன்னார். இதனை நம்பிய ஆசாமிகள் கிளியுடன் அங்கு வந்தனர். அரவிந்த் ரமேஷ் கடையில் திருடப்பட்டவை தான் அது என்பது உறுதியானது. மறைந்திருந்த போலீசார் கிளி விற்க வந்த 3 நபர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பாடியை சேர்ந்த முஜிப் ரஹ்மான், விஜய் கொரட்டூரை சேர்ந்த கலைச்செல்வன் என தெரியவந்ததுள்ளது. இவர்களிடம் இருந்து மூன்று கிளி, பைக் பறிமுதல் செய்யப்பட்டது. திருடி சென்ற கிளிகள் ஒவ்வொன்றையும் 35 ஆயிரத்துக்கு விற்க திட்டம் போட்டிருந்தனர். கிளி திருடிய கடை ஓனரிடமே அதனை விற்க வந்து திருட்டு கும்பல் சிக்கியது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

அக் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ