காந்தி புத்தகத்தை இலவசமாக கொடுக்கும் புதுச்சேரி வாசகர் வட்டம்! Gandhi Jeyanthi | Pondicherry
காந்தி புத்தகத்தை இலவசமாக கொடுக்கும் புதுச்சேரி வாசகர் வட்டம்! Gandhi Jeyanthi | Pondicherry | Gandhi Autobiography புதுச்சேரி வாசகர் வட்டம் சார்பில், காந்தி பிறந்த நாளையொட்டி 25 ஆண்டுகளாக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க இலவசமாக காந்தி வாழ்க்கை வரலாறு புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு காந்தி வாழ்க்கை வரலாறு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி கடற்கரை காந்தி சிலை அருகே நடந்தது. பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு, புதுச்சேரி வாசகர் வட்ட செயலாளர் பேராசிரியர் மணிமாறன் சம்பத்குமார் புத்தகம் வழங்கினார். நிகழ்ச்சியில் காந்தி குறித்த கேள்விகள் கேட்டு, சரியான பதில் அளித்தவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அகில இந்திய திருக்குறள் பண்பாட்டு ஆய்வு மைய நிறுவனர் குறளரசி சீதளாதேவி, மூத்த வழக்கறிஞர் பரிமளம், ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் வெங்கடேசன், ஓவியர் ஷியமலா மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.