உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அப்பாவுக்காக மனமுருக வேண்டிய மகள் சவுந்தர்யா Super star rajinikanth vadivudai amman temple

அப்பாவுக்காக மனமுருக வேண்டிய மகள் சவுந்தர்யா Super star rajinikanth vadivudai amman temple

அப்பாவுக்காக மனமுருக வேண்டிய மகள் சவுந்தர்யா Super star rajinikanth vadivudai amman temple Arulmigu Thiyagaraja Swamy Temple, Thiruvottiyur Soundarya Rajinikanth சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30ம்தேதி அட்மிட் செய்யப்பட்டார். இதயத்தில் இருந்து ரத்தத்தை எடுத்துச் செல்லும் அயோடா தமனி வயிற்றுப்பகுதியில் வீங்கி இருந்தது. வீக்கத்தை சரிசெய்வதற்காக ரத்த நாளத்தில் ஸ்டென்ட்டை டாக்டர்கள் வெற்றிகரமாக பொருத்தினர். மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் ரஜினி பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்ப இளைய மகள் சவுந்தர்யா, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் மனமுருக வேண்டினார். தியாகராஜ சுவாமி ஆதிபுரீஸ்வரர் வட்டப்பாறை அம்மன் வடிவுடையம்மன் சன்னதிகளுக்கு சென்று வழிபட்டார். அருகில் உள்ள வட குரு ஸ்தலம் என அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி கோயிலிலும் சவுந்தர்யா வழிபட்டார். அவரது கணவர் விசாகனும் சாமி கும்பிட்டார். அப்போது, ஒரு பக்தர் ரஜினி சார் எப்படி இருக்கிறார் என கேட்க, பெட்டர் better என சவுந்தர்யா கூறினார்.

அக் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ