அசாதாரண சூழல் வந்தாலும் இனி கவலை இல்லை Forex reserve | India | fourth in the world |
அசாதாரண சூழல் வந்தாலும் இனி கவலை இல்லை Forex reserve | India | fourth in the world | இந்திய அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து 6வது வாரமாக உயர்ந்திருக்கிறது. கடந்த வாரம் 692 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் இருந்த அந்நிய செலாவணி, இந்த வார வர்த்தக முடிவில் 704 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. அதாவது 12 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதுவே ஒரு வாரத்தில் ஏற்பட்ட அதிகபட்ச உயர்வாகும். சீனா, ஜப்பான், சுவிட்சர்லாந்து நாடுகள் மட்டுமே 700 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் அந்நிய செலாவணியை கையிருப்பு வைத்திருக்கின்றன. அந்த வரிசையில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. 2026க்குள் நாட்டின் மொத்த அந்நிய செலாவணி கையிருப்பு 745 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என பாங்க் ஆஃப் அமெரிக்கா முன்பு கணித்திருந்தது. அதை நோக்கி இந்தியா இப்போது பயணிக்கிறது. இதன்மூலம், உலக நாடுகளில் இப்போது நிலவும் அசாதரண சூழல்கள் மற்றும் சர்வதேச சந்தைகளில் ஏற்படும் ஆபத்துகள் தொடர்ந்தாலும் இந்தியாவின் பொருளாதாரம் வலுவுடன் இருக்கும் என்றே பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.