ஈரான் தலையில் இஸ்ரேல் இறக்கிய இடி-பரபரப்பு | Israel vs Hezbollah | Israel vs Iran | Israel attack pl
ஈரான் தலையில் இஸ்ரேல் இறக்கிய இடி-பரபரப்பு | Israel vs Hezbollah | Israel vs Iran | Israel attack plan லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறி வைத்து 3 வாரமாக இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சண்டையின் உச்சமாக ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் குண்டு வீசி கொன்றது. நஸ்ரல்லாவுடன் இருந்த ஈரான் படையின் முக்கிய தளபதி ஒருத்தரும் கொல்லப்பட்டார். நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டதும் பல முஸ்லிம் அமைப்புகள் கொந்தளித்தன. ஈரானால் நஸ்ரல்லா இழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க அந்நாட்டின் மீது 201 பாலிஸ்டிக் ஏவுகணை குண்டுகளை ஈரான் வீசியது. இஸ்ரேலின் வான்படை, மொசாட் உளவு அமைப்பின் தலைமை அலுவலகத்தை குறிவைத்து தாக்கியதாக ஈரான் சொன்னது. அதே நேரம் பெரும்பாலான ஏவுகணைகளை இடைமறித்து வானிலே அழித்து விட்டோம் என்றது இஸ்ரேல். இருப்பினும் ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. இஸ்ரேல் மேல் குண்டு போட்டு தப்பு பண்ணிட்டீங்க. ஈரான் உரிய விலையை கொடுத்தே ஆகும் என்று ஆவேசம் காட்டினார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. இஸ்ரேலை ஈரான் தாக்கியது செவ்வாய்க்கிழமை. இன்றோடு 4 நாட்கள் முடிந்து விட்டது. இதுவரை இஸ்ரேல் பதிலடி கொடுக்கவில்லை. எனவே மிகப்பெரிய தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருவது உறுதியாகி விட்டது. ஈரானில் எண்ணெய் வளம் அதிகம். அங்குள்ள எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து அழிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி பரபரப்பை எகிற வைத்தது. ஒரு வேளை எண்ணெய் கிடங்குகளை இஸ்ரேல் அழித்தால், அது சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடியை கொண்டு வரக்கூடிய அபாயம் உள்ளது. எனவே இதை பண்ண வேண்டாம் என்று இஸ்ரேலின் மிகப்பெரிய ஆதரவு நாடானா அமெரிக்கா வலியுறுத்தியது. இஸ்ரேல் இடத்தில் அமெரிக்கா இருந்தால் எண்ணெய் கிடங்குகளை குறி வைக்காது. வேறு இலக்குகளை தாக்குவோம். ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் எல்லா உரிமையும் இஸ்ரேலுக்கு உண்டு. ஆனால் ஆதரவு தரும் அமெரிக்காவை இஸ்ரேல் நினைத்து பார்க்க வேண்டும் என்றார். அதே நேரம் அமெரிக்க அதிபர் வேட்பாளரான டிரம்ப் இந்த விஷயத்தில் தடாலடி காட்டினார். ஈரானின் அணு உலைகளை குறி வைத்து இஸ்ரேல் பதிலடி கொடுக்க வேண்டும். மற்ற பிரச்னைகளை அடுத்து பார்த்துக்கொள்ளலாம் என்று டிரம்ப் சொன்னார். இப்படி ஈரானுக்கு இஸ்ரேல் என்ன பதிலடி கொடுக்கப்போகிறது என்பது பற்றி உலகமே பரபரப்பாக பேசிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தான் பதிலடி குறித்து இஸ்ரேலின் வார் ரூம் முக்கிய தகவலை வெளியிட்டு உள்ளது. ஈரானில் பதில் தாக்குதல் நடத்த எல்லா வகையிலும் தயாராகி வருகிறோம். இந்த தாக்குதல் தீவிரமானதாகவும் குறிப்பிடத்தக்க வகையிலும் இருக்கும். இப்போது தாக்குதல் தயாரிப்பின் இதய பகுதியில் இருக்கிறோம். நாங்கள் அடிக்கும் போது என்ன சொல்ல வருகிறோம் என்பதை ஈரான் புரிந்துகொள்ளும். நாங்கள் செய்யப்போகும் சம்பவத்துக்கு எங்கள் நட்பு நாடுகள் ஆதரவு தர வேண்டும் என்று இஸ்ரேல் கூறி உள்ளது. என்ன மாதிரியான தாக்குதல் என்பதை இஸ்ரேல் நேரடியாக சொல்லவில்லை. ஆனால் பொடி வைத்து பேசுவதன் மூலம் மிகப்பெரிய தாக்குதலாக இருக்கும் என்று உலக நாடுகள் கருதுகின்றன. அதே போல் பதிலடி திட்டம் இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது; எந்த நேரத்திலும் ஈரான் தாக்கப்படலாம் என்பதையும் இஸ்ரேல் உறுதிப்படுத்தி விட்டது.