உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காஷ்மீர் ஹரியானா Exit Poll முடிவு-பரபரப்பு | Kashmir Exit Poll | Haryana Exit Poll | Cong vs BJP

காஷ்மீர் ஹரியானா Exit Poll முடிவு-பரபரப்பு | Kashmir Exit Poll | Haryana Exit Poll | Cong vs BJP

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. இந்த மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது பற்றிய பல நிறுவனங்களின் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகி பரபரப்பை எகிற வைத்துள்ளது. காஷ்மீரை பொறுத்தவரை கடைசியாக 2014ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இப்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தேர்தல் நடந்துள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவை நீக்கிய பிறகு நடந்த முதல் தேர்தல் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த முறை மும்முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியும், முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியும் கூட்டணி அமைத்தன. பாஜவும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்து களமிறங்கின. இப்போது வெளியாகி இருக்கும் எக்ஸிட் போல் முடிவுகள் காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாகவும் பாஜவுக்கு அதிர்ச்சி தரும் வகையிலும் அமைந்துள்ளன. காஷ்மீரில் மொத்தமுள்ள 90 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 49- 61 இடங்களை கைப்பற்றி வெற்றிபெறும் என என்டிடிவி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜ 20- 32 இடங்களையும், பிடிபி 7-11 இடங்களையும், மற்றவை 4-6 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை