உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொல்கத்தா மருத்துவமனையில் 10 டாக்டர்கள் அதிரடி வெளியேற்றம் | RG kar hospital | Expels doctors | Rag

கொல்கத்தா மருத்துவமனையில் 10 டாக்டர்கள் அதிரடி வெளியேற்றம் | RG kar hospital | Expels doctors | Rag

கொல்கத்தா மருத்துவமனையில் 10 டாக்டர்கள் அதிரடி வெளியேற்றம் | RG kar hospital | Expels doctors | Ragging | Threat | Kolkata கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் ஆகஸ்ட் 9ல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பல அரசு மருத்துவமனைகளிலும் அச்சுறுததல் தொடர்பான புகார்கள் எழ தொடங்கின. சம்பவம் நடந்த ஆர்.ஜி.கர் மருத்துவமனையிலேயே சீனியர் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், வீட்டு ஊழியர்கள் மீது ஜூனியர் டாக்டர்கள் புகார்களை அள்ளி வீசினர். அச்சுறுத்தல், பண மோசடி, ரேக்கிங், துன்புறுத்தல் என மருத்துவமனை சிறப்ப கவுன்சிலிடம் அடுக்கடுக்காக புகார்கள் சென்றன. அதிலும் உடல், மன ரீதியான சித்ரவதை, அறுவறுப்பாக பேசுதல், பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள் மற்றும் மதுபானம் வாங்குதல் மற்றும் மாணவர் விடுதியில் ஆபாசமாக நடந்து கொள்வது, நள்ளிரவில் மது வாங்கி வர சொல்வது என்று புகார் பட்டியல் நீண்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய ஆர்.ஜி.கர் மருத்துவமனை கவுன்சில், குற்றச்சாட்டு உறுதியான 59 பேரை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்துள்ளது. இவர்களில் அதிக புகாருக்கு உள்ளான 10 மருத்துவர்களை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றி உள்ள நிர்வாகம், ஹாஸ்டலை காலி செய்ய 72 மணி நேரம் கெடு விதித்துள்ளது. டாக்டர்கள் சவுரப் பால், ஆஷிஷ் பாண்டே, அபிஷேக் சென், ஆயுஷ்ரீ தபா, நிர்ஜன் பக்சி, சாரிப் ஹசன், நிலாக்னி தெப்னாத், அமரேந்திர சிங், சத்பால் சிங், தன்வீர் அஹமத் காசி ஆகியோரின் மருத்துவ பதிவை ரத்து செய்ய பரிந்துரைத்து அவர்களின் பெயரை மேற்கு வங்க மெடிக்கல் கவுன்சிலுக்கு அனுப்பி உள்ளது. மற்ற 49 பேரின் பெயர்களும் விசாரணை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக்காக மருத்துவமனையின் புகார் கமிட்டி, ராகிங் தடுப்பு கமிட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அக் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !