உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கண்டிஷனுடன் கெஜ்ரிவால் விடுத்த சவால்! | Arvind Kejriwal | PM Modi | aam aadmi party

கண்டிஷனுடன் கெஜ்ரிவால் விடுத்த சவால்! | Arvind Kejriwal | PM Modi | aam aadmi party

கண்டிஷனுடன் கெஜ்ரிவால் விடுத்த சவால்! | Arvind Kejriwal | PM Modi | aam aadmi party டில்லியில் ஆம்ஆத்மி கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் பேசினார். தேர்தல் கருத்துக்கணிப்புகள் மூலம், ஹரியானா மற்றும் காஷ்மீரில் பாஜவின் இரட்டை இன்ஜின் அரசு தோற்க போவது தெரிய வந்துள்ளது. கடந்த ஜூனில் 240 தொகுதிகள் மட்டுமே பெற்ற போது முதல் இன்ஜின் தோல்வியடைந்தது. ஜார்க்கண்ட் மற்றும் மஹாராஷ்டிராவில் இரண்டாவது இன்ஜின் மெதுவாக தோல்வியடைந்து வருகிறது. இரட்டை இன்ஜின் என்றால் ஊழல், வேலைவாய்ப்பின்மை என்பதை மக்கள் உணர்ந்து கொண்டனர். பாஜ ஏழை மக்களுக்கு எதிரான கட்சி. டில்லியில் ஆம் ஆத்மி அரசின் கீழ் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மிசாரம் வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடிக்கு நான் சவால் விடுகிறேன். அடுத்த பிப்ரவரியில் வர உள்ள டில்லி சட்டசபை தேர்தலுக்கு முன் பாஜ ஆளும் 22 மாநிலங்களில் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். இதை மட்டும் செய்தால் நானே பாஜவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்றார்.

அக் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை