உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / லட்சக்கணக்கான பக்தர்கள் திருக்குடைகளுக்கு கற்பூர ஆரத்தி Thirukkudai Utsavam Hindu Dharmartha Samiti

லட்சக்கணக்கான பக்தர்கள் திருக்குடைகளுக்கு கற்பூர ஆரத்தி Thirukkudai Utsavam Hindu Dharmartha Samiti

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 4ம்தேதி பிரம்மோற்சவ விழா துவங்கியது. ஏழுமலையானுக்கு படைக்கப்படும் அஷ்ட மங்கல பொருட்களில் திருக்குடையும் ஒன்று. உணவு உற்பத்திக்கு போதுமான மழை வேண்டி வேங்கடமுடையானுக்கு வெண்பட்டு திருக்குடைகளை காணிக்கையாக வழங்கும் சம்பிரதாயம் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் இருந்து வருகிறது. அதன்படி, பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, இந்து தர்மார்த்த சமிதி சார்பில், புதிய வெண் பட்டுக்குடைகள் ஆண்டுதோறும் சென்னையிலிருந்து பாதயாத்திரையாக எடுத்து சென்று ஏழுமலையான் கோயிலில் சமர்ப்பிக்கப்படுகிறது.

அக் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை