தீபாவளிக்கு முன் பிரதமரை சந்திக்க நேரம் கேட்பு! | PMModi | Udayanidhi | DMK
தமிழகத்தில் மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் மூன்று வழித்தடங்களில் நடந்து வருகின்றன. இதற்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் தேவை. . நிதி பற்றாக்குறை காரணமாக பணிகள் தாமதமாகும் நிலை ஏற்பட்டது. பிரதமர் மோடியை சமீபத்தில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், மெட்ரோ ரயில் பணிகளுக்கு நிதி வழங்க வலியுறுத்தினார். 7,425 கோடியை மத்திய அரசின் பங்களிப்பாக வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 33,593 கோடி ரூபாய் பன்னாட்டு வங்கி கடனுதவியும் பெற்று தரப்படுகிறது. 65 சதவீத பங்களிப்பை மத்திய அரசு வழங்குவது உறுதியாகி உள்ளதால் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் குறித்த காலத்திற்குள் முடியும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவிக்க துணை முதல்வர் உதயநிதி, பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.