உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / லஞ்சம் தந்த ஆர்டிஓ: தூக்கிய விஜிலன்ஸ் RTO arrested salem vigilance DVAC taking bribe Directorate

லஞ்சம் தந்த ஆர்டிஓ: தூக்கிய விஜிலன்ஸ் RTO arrested salem vigilance DVAC taking bribe Directorate

சேலம் கந்தம்பட்டியில் சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது . இங்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரியாக பணியாற்றி வருபவர் சதாசிவம் (வயது 58). ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் சம்பவங்கள் அதிகளவில் நடப்பதால், அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் திடீரென ரெய்டுக்கு செல்வது வழக்கம். இதனால் சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரை இரு தினங்களுக்கு முன் சதாசிவம் தொடர்பு கொண்டார். ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு ரெய்டுக்கு வரும் முன் முதலிலேயே சொல்லிவிட்டால் வசதியாக இருக்கும்; உஷாராகி விடுவோம் என கூறினார். அப்படி முன்கூட்டியே சொன்னால் மாதம் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து விடுகிறோம். அதற்கு அட்வாஸ்சாக ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன். டீல் ஓகேவா? என சதாசிவம் கேட்டார். இதற்கு ஒப்புக்கொண்டது போல ரவிக்குமார் நடித்தார். ரெய்டு வருவதற்கு முன் தகவல் கொடுப்பதாகவும் ஆர்டிஓ சதாசிவத்திடம் உறுதியளித்துவிட்டு சென்றார். ஆர்டிஓ சதாசிவம் தனக்கே லஞ்சம் கொடுப்பதாக கூறியது பற்றி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கிருஷ்ணராஜிடம் ரவிக்குமார் புகார் சொன்னார். சதாசிவத்தை கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டம் போட்டனர். அதன்படி, நேற்று இரவு சேலம் கரூப்பூர் அருகே ஒட்டல் ஒன்றுக்கு வந்து 1 லட்சம் பணத்தை வாங்கிக்கொள்வதாக, சதாசிவத்திடம் ரவிக்குமார் கூறியுள்ளார். ஓட்டலுக்கு வந்த ரவிக்குமாரிடம் சதாசிவம் ஒரு லட்சம் ரூபாயை கொடுத்தார். அங்கு ஏற்கனவே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சதாசிவத்தை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அக் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை