முதல்வர் மம்தாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி 50 doctors resigned
முதல்வர் மம்தாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி 50 doctors resigned | Kolkata R.G. Gar Govt hospital | Junior Doctors | Mamtha | கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி கொல்கத்தா அரசு மருத்துவ கல்லூரி பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதை கண்டித்தும் நீதி கேட்டும் கொல்கத்தா மருத்துவமனை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். மேற்கு வங்க முதல்வர் மம்தா அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகளை ஏற்பதாக உறுதி அளித்தார். அதன் பின் டாக்டர்கள் கடந்த 21ம் தேதி பணிக்கு திரும்பினர். கடந்த வாரம் இன்னொரு மருத்துவமனையில் நோயாளியின் குடும்பத்தினர், டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் ஜூனியர் டாக்டர்கள் கடந்த 1ம் தேதியில் இருந்து மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கினர். 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பெண் டாக்டருக்கு நீதி வேண்டும்; வேலை செய்யும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில் கொல்கத்தா அரசு மருத்துவமனையின் சீனியர் டாக்டர்கள் 50 பேர் இன்று ராஜினாமா செய்தனர். கொலை செய்யப்பட்ட இளம் பெண் டாக்டருக்காக தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த ராஜினாமா முடிவு எடுத்ததாக அவர்கள் கூறினர். சீனியர் டாக்டர்களின் முடிவை, மருத்துவ மாணவர்கள் வரவேற்றனர். டாக்டர்களின் கோரிக்கைகளில் 90 சதவீதம் அடுத்த மாதம் நிறைவேற்றப்படும். எனவே, டாக்டர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என மேற்கு வங்க தலைமை செயலாளர் மனோஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.