உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆந்திரா வீடியோவுக்கு உதயநிதியின் ரியாக்சன் | Udhayanidhi Stalin

ஆந்திரா வீடியோவுக்கு உதயநிதியின் ரியாக்சன் | Udhayanidhi Stalin

ஆந்திரா வீடியோவுக்கு உதயநிதியின் ரியாக்சன் | Udhayanidhi Stalin 2023 செப்டம்பரில் சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது. அப்போது துணை முதல்வர் உதயநிதி சனாதன நம்பிக்கைக்கு எதிராக பேசி இருந்தார். கொசு, டெங்கு காய்ச்சல்,மலேரியா இதையெல்லாம் நாம் எதிர்க்க கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படி தான் இந்த சனாதனம் என கூறியிருந்தார். இதையடுத்து நாடு முழுவதும் உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது. பாஜ ஆளும் பல மாநிலங்களில் உதயநிதி மீது வழக்கு பதியப்பட்டது. ஆந்திராவில் கோயில் வாசலில் உதயநிதி படம் அச்சிடப்பட்ட மிதியடி போடப்பட்டு அதனை காலால் மிதித்து ஆன்மீக அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை ஒரு வருடம் கழித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி இன்னும் நல்லா மிதிக்கட்டும் என கூறியுள்ளார். என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளை பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது. கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனை பார்க்கிறேன். அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். கருணாநிதி மீது ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் தொடுத்தனர். ஸ்டாலின் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை. அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும் மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி. என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும். திமுக உடன்பிறப்புகள் இதை கண்டு கோபமுற வேண்டாம். இதற்கு எதிர்வினையாற்றுவதை தவிர்த்து, சமத்துவப் பாதையில் என்றும் அயராது நடை போடுவோம் என உதயநிதி கூறியுள்ளார்.

அக் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை