புரதம் ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு | nobel prize| Chemistry | Protein design
புரதம் ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு | nobel prize| Chemistry | Protein design ஸ்வீடனை சேர்ந்த வேதியியலாளர் ஆல்பிரட் நோபல் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு 1901 முதல் இந்த பரிசு வழங்கப்படுகிறது. இன்று வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் டேவிட் பாக்கர், பிரிட்டனின் டெமிஸ் ஹாசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகிய 3 பேருக்கு இந்த பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. புரதம் சார்ந்த ஆராய்ச்சிக்காக இவர்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்காக டேவிட் பாக்கருக்கு நோபல் பரிசின் ஒரு பாதி வழங்கப்படும். எஞ்சிய பரிசு தொகை புரத கட்டமைப்பு குறித்த ஆராய்ச்சிக்காக டெமிஸ் மற்றும் ஜான் ஆகியோருக்கு வழங்கப்படும். ஆல்பிரெட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10ம் தேதி ஸ்டாக்ஹோமில் நடக்கும் விழாவில் நோபல் பரிசுகள் வழங்கப்படும்.