உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / லஞ்சம் வாங்கும் மனைவி; காட்டி கொடுத்த கணவர் Husband| Wife| Bribe | Video | Telangana |

லஞ்சம் வாங்கும் மனைவி; காட்டி கொடுத்த கணவர் Husband| Wife| Bribe | Video | Telangana |

லஞ்சம் வாங்கும் மனைவி; காட்டி கொடுத்த கணவர் Husband| Wife| Bribe | Video | Telangana | கணவரை லஞ்சம் வாங்க நிர்பந்திக்கும் மனைவிகளை பார்த்திருக்கலாம். தெலங்கானாவில் மனைவி லஞ்சம் வாங்குவதை கணவர் அம்பலப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். தெலங்கானாவில் ரங்காரெட்டி மாவட்டம், மணிகொண்டா நகராட்சியில் இன்ஜினியரிங் துறையில் உயர் அதிகாரியாக இருப்பவர் திவ்யா ஜோதி. முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரம் இருக்கும் இவர், டெண்டர் தொடர்பான முடிவுகள் எடுக்கும்போது, கான்ட்ராக்டர்கள் திவ்யா ஜோதியை பலமாக கவனிப்பது வழக்கம். தினமும் லஞ்சமாக வாங்கி பணத்தை வீட்டில் மறைத்து வைத்து உள்ளார். இதை கண்ட திவ்யாவின் கணவர் ஸ்ரீபத் கண்டித்தார். லஞ்சம் வாங்க கூடாது என பலமுறை அறிவுறுத்தியும் மனைவி கேட்பதாக இல்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வர ஆரம்பித்தது. நான் வேண்டாம் என்றாலும் எனக்கு மேல் இருக்கும் அதிகாரிகள் லஞ்சம் வாங்க சொல்கிறார்கள் என கணவரிடம் சமாதானம் சொல்லி இருக்கிறார் திவ்யா ஜோதி. எதையும் ஏற்க மறுத்த ஸ்ரீபத், மனைவிக்கு பாடம் புகட்ட முடிவு செய்தார். வீட்டில் மறைத்து வைத்துள்ள லஞ்ச பணத்தை எல்லாம் தேடி கண்டுபிடித்து வீடியோவில் பதிவு செய்தார். வீட்டின் பீரோவுக்கு பின்னால் உள்ள சுவர்களில், சாமி படங்களுக்கு பின்னால், ஷூ ஸ்டாண்ட்கள், புடவைகளுக்குள் என பல இடங்களில் திவ்யா ஜோதி மறைத்து வைத்த சுமார் 80 லட்சம் ரூபாய் பணத்தை ஸ்ரீபத் வீடியோ மூலம் அம்பலப்படுத்தினார். அந்த வீடியோ வைரலானது. அதன் விளைவாக திவ்யா ஜோதி ஐதராபாத் மாநகராட்சிக்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டார்.

அக் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை