உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டாடாவை பார்க்க கோவா நாய் ஓடிவந்தது ஏன் தெரியுமா Ratan Tata a Dog lover | Goa Dog | Tata passed away

டாடாவை பார்க்க கோவா நாய் ஓடிவந்தது ஏன் தெரியுமா Ratan Tata a Dog lover | Goa Dog | Tata passed away

மக்கள் மனம் வென்ற தொழிலதிபர் ரத்தன் டாடா தனது 86 வயதில் புதன்கிழமை நள்ளிரவு காலமானார். மொத்த நாடும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறது. மிகப்பெரிய கோடீஸ்வரராக இருந்த போதும் கூட எளிமையை போற்றும் பண்பு அவரிடம் மிகுதியாய் இருந்தது. ஏழை, நடுத்தர மக்கள் வளர்ச்சியில் அதிக கவனம் கொண்டு இருந்தார். தான் சம்பாதித்த கோடிகளில் பெரும் பகுதியை சமூக நலன் சார்ந்த விஷயங்களுக்காக அள்ளிக்கொடுத்தவர் ரத்தன் டாடா. கைவிடப்பட்ட கால்நடைகள், நாய்கள் மீது அவருக்கு பிரியம் அதிகம். குறிப்பாக தெருநாய்கள் மீது அலாதி அன்பு கொண்டு இருந்தார். இறுதி அஞ்சலிக்காக ரத்தன் டாடா உடல் வைக்கப்பட்டு இருந்த இடத்துக்கு அவர் ஆசையாக வளர்த்த கோவா என்ற நாய் வந்தது. தனது இறுதி மரியாதையை செலுத்தி எஜமானருக்கு பிரியா விடை கொடுத்தது.

அக் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி