உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 8 நாளில் சிக்கிய 7 ஆயிரம் கோடி கொகைன் | 200 kg cocaine seized | Delhi Police

8 நாளில் சிக்கிய 7 ஆயிரம் கோடி கொகைன் | 200 kg cocaine seized | Delhi Police

டில்லியின் மேற்கு பகுதியான ரமேஷ் நகரில் போதை பொருள் மறைத்து வைத்து இருப்பதாக ரகசிய தகவல் வந்தது. சந்தேகத்துக்குரிய ஒரு கடையின் குடோனில் ஆய்வு செய்த போது 200 கிலோ கொகைன் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 2 ஆயிரம் கோடி என கூறப்படுகிறது. போலீசார் வருவதை முன்பே அறிந்து குற்றவாளிகள் தலைமறைவாகி உள்ளனர். இன்று கைப்பற்றப்பட்ட போதை பொருள்கள் மிக்சர் பாக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர் லண்டனுக்கு தப்பி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. எட்டே நாளில் தலைநகர் டில்லியில் 7,500 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

அக் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை