பயணியின் 'அந்த இடத்தில்' கிடைத்த தங்க புதையல் chennai airport| gold smuggling
பயணியின் அந்த இடத்தில் கிடைத்த தங்க புதையல் chennai airport| gold smuggling மலேசிய தலைவர் கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் சென்னை வந்த பயணிகளை ஏர்போர்ட் சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர். சென்னையை சேர்ந்த 30 வயதான ஆண் பயணி ஒருவர் மலேசியாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு வந்ததாக கூறினார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார். அவரது உடமைகளை பரிசோதித்தனர். சந்தேகப்படும்படி ஏதும் இல்லை. எனினும், தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்தனர். உள்ளாடைக்குள் ஒரு பார்சலை மறைத்து வைத்து இருந்தார். அதில், 24 கேரட் தங்கம் சிறு, சிறு துண்டுகளாக இருந்தன. மொத்தம் 1 கிலோ தங்கத்தை கடத்தி வந்திருந்தார். அதன் மதிப்பு 72 லட்சம் ரூபாய். தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்தி விசாரணையில், கூலிக்காக தங்கம் கடத்தும் குருவியாக செயல்பட்டது தெரிந்தது. அவர் கைது செய்யப்பட்டார். குருவியாக பயன்படுத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை தொடங்கியுள்ளது.