தோல்விக்கு காரணம் சொல்ல வழி தேடும் சீனியர்கள்! | Rahul | EVM machines | Haryana Election
தோல்விக்கு காரணம் சொல்ல வழி தேடும் சீனியர்கள்! | Rahul | EVM machines | Haryana Election ஹரியானாவில் தோல்வி குறித்து விவாதிக்க காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடத்தியது. ஆளுக்கு ஒரு காரணம் சொல்ல சிலரோ, இவிஎம் மெஷின்கள் தான் காரணம் என கூறி உள்ளனர். எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த ராகுல், ஒரு கட்டத்தில் இத்தனை மாதங்கள் நான் கஷ்டப்பட்டதற்கு பலன் இல்லை. ஹரியானா காங்கிரஸ் தலைவர்களின் சுயநலமே இதற்கு காரணம். தங்கள் சுயநலத்தை பார்த்து கட்சியின் வருங்காலத்தை கோட்டை விட்டுள்ளனர். இவிஎம் மெஷின்கள் குறித்து எனக்கு முழு அறிக்கை வேண்டும் என சொல்லி கோபத்துடன் வெளியே சென்று விட்டாராம். இந்த விவகாரம் வெளியே கசிய, இதெல்லாம் பொய். அப்படி எதுவுமே நடக்கவில்லை என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் மறுத்தனர். ஆனால் ராகுல் கோபப்பட்டது உண்மை என அடித்து சொல்கின்றனர் சில சீனியர் தலைவர்கள். இவிஎம் குறித்து என்ன ரிப்போர்ட் தருவது? என காங்கிரஸ் தலைவர்கள் குழம்பி உள்ளனராம். விரைவில் தோல்விக்கு காரணமான ஹரியானா நிர்வாகிகள் மீது நடவடிக்கை பாயும் என சொல்லப்படுகிறது. கட்சி பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் தான் ஹரியானாவில் சீட் ஒதுக்கீடு செய்வதற்கு முழு அத்தாரிட்டி. இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, ராகுலுக்கு நெருக்கமானவர் வேணுகோபால். வழக்கம் போல வேறு சில தலைகள் உருளும். உண்மையாக யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அவர் ஜாலியாக இருப்பார். இதுதான் காங்கிரஸ் மாடல் என வருத்தப்படுகின்றனர் சீனியர்கள்.