சென்னையில் ரெட் அலர்ட்டை தொடர்ந்து கொட்டும் மழை | Chennai Rain | Chennai Red Alert
சென்னையில் ரெட் அலர்ட்டை தொடர்ந்து கொட்டும் மழை | Chennai Rain | Chennai Red Alert சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று இரவே சென்னையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை தொடங்கியது. சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. குறிப்பாக மேடவாக்கம், பள்ளிக்கரணை, குரோம்பேட்டை ,வேளச்சேரி, நெற்குன்றம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. வேளச்சேரி, தரமணி,திருவான்மியூர், அடையார்,பெருங்குடியில் தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கியது. இதுதவிர சென்னை சுற்றுவட்டார பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இடியுடன் கூடிய மழையால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர்.