/ தினமலர் டிவி
/ பொது
/ ரோட்டில் மீன் பிடித்து விளையாடிய கோவை மக்கள் | Coimbatore Rain | Chennai Rain
ரோட்டில் மீன் பிடித்து விளையாடிய கோவை மக்கள் | Coimbatore Rain | Chennai Rain
ரோட்டில் மீன் பிடித்து விளையாடிய கோவை மக்கள் | Coimbatore Rain | Chennai Rain சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை கொட்டுகிறது. அதே நேரம் உள் மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்கிறது. தொடர் மழை காரணமாக கோவையில் குளங்கள் நிரம்பி வருகின்றன. திருச்சி ரோடு சுங்கம் பகுதியில் உள்ள வாலாங்குளம் நிரம்பிவிட்டது. உபரி நீர் வடிகால் வழியே வெளியேறி வருகிறது. வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் கழிவு நீருடன், குளத்து நீரும் கலந்து ரோட்டில் பாய்ந்தது. குளத்தில் இருந்த பெரிய, பெரிய மீன்களும் ரோட்டில் அடித்து வரப்பட்டன. அவற்றை பொதுமக்கள் உற்சாகத்துடன் பிடித்து சென்றனர்.
அக் 15, 2024