மூன்று வண்ணங்களை வைத்தே முடிவு செய்யலாம் | Bridge | Rain Under Bridge
மூன்று வண்ணங்களை வைத்தே முடிவு செய்யலாம் | Bridge | Rain Under Bridge கோவையில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து பெய்தது. பாலங்களுக்கு அடியில் மழை நீர் சூழ்ந்து வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். குறிப்பாக சாய்பாபா காலனி- சிவானந்த காலனி ரோட்டில் ரயில்வே பாலத்துக்கு அடியில் தொடர்ந்து இரண்டு நாள் பஸ் சிக்கி கொண்டது. இதையடுத்து மழை காலங்களில் பாலத்துக்கு அடியில் செல்லும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பலத்துக்கு முன்னதாக பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணத்தில் அடிக்கப்பட்ட கம்பங்கள் இருபுறங்களிலும் நடப்பட்டுள்ளது. கனமழையின் போது கம்பத்தில் பச்சை நிறம் வரை தெரிந்தால் அனைத்து வாகனங்களும் செல்லலாம். மஞ்சள் நிறம் வரை மூழ்கி இருந்தால் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும். டூவீலர்கள் இயக்குவது சிரமமாக இருக்கும். கம்பத்தில் சிவப்பு வண்ணம் வரை மூழ்கி இருந்தால் எந்த வாகனங்களும் செல்லக்கூடாது என அர்த்தம். அந்த நேரத்தில் போக்குவரத்து போலீசே பாலத்தை மூடி விடுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இப்போது சோதனைக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நுட்பம் விரைவில் அனைத்து பாலத்திலும் கொண்டுவரப்படும் என அதிகாரிகள் கூறினர்.