மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் Chennai rain| flood| school open
மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் Chennai rain| flood| school open வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அடுத்த 12 மணி நேரத்துக்கு சென்னையில் கன மழை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதீத கன மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்பதால் ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் இன்று வழக்கம்போல் செயல்படும் என கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம் போல செயல்படும். மழை நிவாரண முகாம்களாகச் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம் போல இயங்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.