கரையை கடந்ததும் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தென்மேற்கு வங்க கடலில் நிலை கெண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 15 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்தது. மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புதுச்சேரி - நெல்லூர் இடையே சென்னைக்கு வடக்கே இன்று அதிகாலை 4.30 மணிக்கு கரையை கடந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அக் 17, 2024