கடையை உடைத்து அரிசி மூட்டையை தூக்கிய யானை coimbatore| wild elephant|
கடையை உடைத்து அரிசி மூட்டையை தூக்கிய யானை coimbatore| wild elephant| கோவை தொண்டாமுத்தூர் அருகே, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் நேற்றிரவு உணவு தேடி வந்த யானை ஒன்று, செம்மேடு கிராமத்துக்குள் புகுந்தது. அங்கிருந்த கடையை உடைத்து 25 கிலோ அரிசி மூட்டையை அலேக்காக தூக்கி ரோட்டில் போட்டு உடைத்து தின்றது. அங்கிருந்தவர்கள் போ சாமி... போயிடு.. என்று அன்போடு கூறி யானையை அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர். செம்மேடு கிராம வீதிகளில் வலம் வந்த யானையை, வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அங்கிருந்து வனத்துக்குள் விரட்டினர். வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் முகாமிட்டுள்ள யானைகள் அடிக்கடி கிராமத்திற்குள் நுழைந்து விடுகின்றன. வனத்துறையினர் கண்காணித்து விரட்டினாலும், மீண்டும் மீண்டும் யானைகள் வருவது தொடர்கிறது.