புயல் சின்னம் பிசுபிசுக்க 2 காரணம்-பரபரப்பு ரிப்போர்ட் | chennai rain | depression in bay of bengal
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரை கடக்கும் போது என்ன ஆகுமோ என்று மொத்த சென்னையும் பதைபதைத்து கொண்டிருந்த நேரத்தில், சரத்குமார் நடித்த மாயி படத்தில் வரும் மின்னல் கேரக்டர் போல சுவடே இன்றி கரை கடந்து இருக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலில் நகர்ந்து வரும் போதே மொத்த சென்னையும் வெள்ளத்தில் தத்தளிக்கும் அளவு மழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக 24 மணி நேரத்தில் 300 மில்லி மீட்டர் பேய் மழை அடித்து ஊற்றியது. ஆனால் கரையை கடந்த போது எந்த சலனமும் இல்லை. இம்மி கூட மழை பெய்யவில்லை. காற்றழுத்த தாழ்வு மண்டலம் எப்படி வெறுமையாக கரை கடந்தது என்பது பலருக்கும் குழப்பமாக இருக்கிறது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். வங்க கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி. பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.