140 கிலோ வாட் நிலையம் Solar Power Station| Solar panel installation at Kovai| Ukkadam
140 கிலோ வாட் நிலையம் Solar Power Station| Solar panel installation at Kovai| Ukkadam கோவை உக்கடம் பெரிய குளத்தில் சுவிஸ் நிறுவனத்துடன் இணைந்து மாநகராட்சி சார்பில் ரூ. 1.1 கோடி மதிப்பில் 140 கிலோ வாட் திறன் கொண்ட சாேலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. சுவிஸ் வளர்ச்சி நிறுவன உதவி இயக்குனர் கிறிஸ்டியன் மற்றும் ப்ரூடிகர் தலைமையிலான குழு மற்றும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த ஆண்டு உக்கடம் பெரிய குளத்தில் ஆய்வை துவங்கினர். நேற்று பெரிய குளத்தில் சோலார் பேனல் பொருத்தும் பணி துவங்கியது விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு மின் உற்பத்தி துவங்கப்படும் என கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறினர். இதேபோல திருச்சி, நெல்லை உட்பட நாட்டின் 7 நகரங்களில் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க சுவிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.