உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வயநாடு தேர்தலில் CPI வேட்பாளர் அறிமுகம் | CPI | Sathyan Mokeri | Priyanka | Wayanad | Congress

வயநாடு தேர்தலில் CPI வேட்பாளர் அறிமுகம் | CPI | Sathyan Mokeri | Priyanka | Wayanad | Congress

காலியாக உள்ள லோக்சபா தொகுதியான வயநாடு மற்றும் பாலக்காடு, செலக்காரா சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 13ல் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இரு தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் வயநாட்டில் ராஜினாமா செய்தார். இப்போது காங்கிரஸ் வேட்பாளராக ராகுலின் சகோதரி பிரியங்கா களமிறங்கி உள்ளார். முதல்முறையாக பிரியங்கா தேர்தலில் களமிறங்குவதால் அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். ராகுல் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜா போட்டியிட்டார். பிரியங்காவை எதிர்த்து யாரை களமிறக்குவது என மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணி கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வந்தன. வேட்பாளர் பற்றி முடிவு செய்வதற்காக ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. முடிவில் அக்கட்சியின் மூத்த தலைவர் சத்யன் மொகேரி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அக் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை