சாதாரண கட்டணத்துக்கு மாறிய சொகுசு பஸ்கள்
சாதாரண கட்டணத்துக்கு மாறிய சொகுசு பஸ்கள் தமிழகத்தில் நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. 9000 நகர பஸ்களில் 7300க்கு மேற்பட்ட சாதாரண கட்டண பஸ்களில் இலவச திட்டம் அமலில் உள்ளது. தமிழகம் முழுவதும் தினமும் சராசரியாக 50 லட்சத்துக்கு மேற்பட்டோர் இலவசமாக பயணிக்கின்றனர். சென்னையில் 1500க்கு மேற்பட்ட சாதாரண கட்டண பஸ்களில், பெண்கள் இலவச சென்று வரும் நிலையில், சமீபத்தில் தொடங்கப்பட்ட130 நீல நிற சொகு பஸ்களுக்கும் இத்திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இலவச பயண திட்டத்தில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இத்திட்டத்தில் நீலநிற பஸ்களும் சேர்க்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். நீலநிற பஸ்கள் பயன்பாட்டுக்கு வந்தபோது அவை சொகுசு பஸ்களாக இருந்தன. தற்போது அவை, சாதாரண கட்டண பஸ்களாக மாற்றப்பட்டு உள்ளன. கோவை, மதுரை, திருநெல்வேலியில் இயக்கப்படும் நீலநிற பஸ்களில் கனிசமான அளவு மகளிர் விடியல் பயண பஸ்களாக இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.