3 நாளில் 50 வெடிகுண்டு மிரட்டல் இதையெல்லாம் செய்பவர்கள் யார்? airport| flight |bomb threat| chennai
3 நாளில் 50 வெடிகுண்டு மிரட்டல் இதையெல்லாம் செய்பவர்கள் யார்? airport| flight |bomb threat| chennai airport கண்டுபிடிக்க முடியாமல் அதி பல்வேறு ஏர்போர்ட்கள் மற்றும் விமானங்களுக்கு சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை புரளியாகவே இருந்தபோதும், திட்டமிட்டு நடத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும், 50க்கு மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இது குறித்து விரிவான அறிக்கை அளிக்க விமான பாதுகாப்பு துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உளவுத்துறை அதிகாரிகள் கூறும்போது, விமான பயணத்தில் கசப்பான அனுபவங்களை சந்தித்தவர்கள், விமான நிறுவனங்களில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்கள், ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்த நினைப்பவர்கள் இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபடுகின்றனர். பொதுவாக எஸ்எம்எஸ், இமெயில் மூலமாகத்தான் வெடிகுண்டு மிரட்டல்கள் வரும். தற்போது, விபரம் தெரிந்த சிலர், டார்க் பிரவுசர் வாயிலாக, அடையாளத்தை மறைத்து, இந்த செயல்களில் ஈடுபட துவங்கியுள்ளனர் என்றனர். மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறும்போது, வெடிகுண்டு மிரட்டல் வரும்போ விமானம் தனியான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை நடத்தப்படும். இதற்கு 3 முதல் 6 மணிநேரம் வரை ஆகும். புரளி என தெரியும் வரை அனைவரும் பதட்டமான மனநிலையில்தான் இருப்பர் என்றனர். சென்னை ஏர்போர்ட்டுக்கு கடந்த ஜூனில் இருந்து தற்போது வரை 5 மாதத்தில் 13 முறை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இது தொடர்பாக ஒரு சிலர் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர். சில மிரட்டல் அழைப்புகள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ளன. பிற ஏர்போர்ட்களுக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் இமெயில்கள் இங்கும் திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால், இதெல்லாமே திட்டமிட்டே நடத்தப்படுகிறதா? என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.