உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காஷ்மீரின் உட்கட்டமைப்பை சீர்குலைக்க முயற்சி! | Pakistan's ISI | Jammu and Kashmir | Omar Abdullah

காஷ்மீரின் உட்கட்டமைப்பை சீர்குலைக்க முயற்சி! | Pakistan's ISI | Jammu and Kashmir | Omar Abdullah

காஷ்மீரின் ககாங்கிர் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் சுரங்க பாதை அமைக்கும் பணியில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு இங்கு வந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி சென்றனர். இதில் ஆறு வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் டாக்டர் ஒருவர் உட்பட ஏழு பேர் இறந்தனர். இந்த சம்பவம் குறித்து நம் உளவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பயங்கரவாதிகள் திட்டமிட்டே துப்பாக்கிச்சூடு நடத்திஉள்ளனர். இந்த சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டால் ராணுவ பலம் அதிகரிக்கும். நம் உள்கட்டமைப்பு பணிகளை சீர்குலைக்கும் நோக்கத்திலேயே இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர்.

அக் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ