பம்மி பம்மி பேசறாப்ல... ஆளே மாறிய சந்திரமோகன் | Chandramohan arrest | Mylopore police marina video
போலீசிடம் சந்திரமோகன், தனலட்சுமி ஜோடி செய்த அலும்பு வீடியோ பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று அவர்களை மயிலாப்பூர் போலீசார் கைது செய்தனர். முன்னதாக, போலீசிடம் உதார் விட்ட விவகாரம் பூதகாரமாகி விட்டதையும், போலீஸ் தங்களை தேடுவதையும் உணர்ந்த ஜோடி தலைமறைவானது. துரைப்பாக்கம் லாட்ஜில் பதுங்கி இருந்த போது சந்திரமோகன், தனலட்சுமியை தட்டி தூக்கியது போலீஸ். உடனே மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார் சந்திரமோகன். அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் லாட்ஜில் இருந்த ஜோடியை போலீசார் கைது செய்த போது லைவாக என்ன நடந்தது என்பது தொடர்பான புதிய வீடியோ இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் நாள், உதயநிதியை கூப்பிடவா... டேய் பல்லி மூஞ்சி... அல்லக்கை... முடிஞ்சா அரஸ்ட் பண்ணுடா... என்று போலீசையே மிரட்டிய சந்திரமோகன், கைதான போது சார் போதை சார்... போதையில என்ன நடந்துச்சுனே தெரில... மன்னிச்சிருங்க சார்... இப்ப வீடியோ பார்த்த அப்புறம் தான் எல்லாமே தெரிஞ்சிது என்று போலீசிடமே உருட்டி இருக்கிறார். மெரினாவில் படம் காட்டிய சந்திரமோகன், லாட்ஜில் அப்படியே பம்மி பம்மி பேசும் வீடியோ தீயாய் பரவி வருகிறது.