உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீட்டு வாசலில் கணவர் கண் எதிரே நிகழ்ந்த சம்பவம்

வீட்டு வாசலில் கணவர் கண் எதிரே நிகழ்ந்த சம்பவம்

வீட்டு வாசலில் கணவர் கண் எதிரே நிகழ்ந்த சம்பவம் மதுரை திருமலை நாயக்கர் மகால் அருகே பந்தடியில்7 வது தெருவை சேர்ந்தவர்கள் துவாரகன்- மஞ்சுளா தம்பதி. ஞாயிறன்று தீபாவளிக்கு பொருட்கள் வாங்க மாட்டுதாவணிக்கு பைக்கில் சென்றுவிட்டு இரவு திரும்பினர். வீட்டு முன் கணவர் பைக்கை நிறுத்தியதும், மஞ்சுளா இறங்கினார். அப்போது அவர்களை பாலோ செய்து பைக்கில் வந்த திருடன்கள், மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை இழுத்தனர். அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். கணவர் துவாரகனும் பைக்குடன் விழுந்தார். அவர் கண்ணெதிரே, திருடன் கையில் சிக்கிய மஞ்சுளா பல அடி தூரத்திற்கு ரோட்டில் தரதரவென இழுத்து செல்லப்பட்டார். அவர் அணிந்திருந்த சுமார் ஒன்றரை பவுன் தங்க செயின் அறுந்து திருடன் கைக்கு சென்றதும் அவர்கள் தப்பிவிட்டனர். கெட்டியாக பிடித்து இருந்ததால் மற்றொரு ஒன்றரை பவுன் செயின் பறிபோகாமல் தப்பியது. இழுத்து செல்லப்பட்டதில் மஞ்சுளாவுக்கு கழுத்து கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக தெற்கு வாசல் போலீசார் செயின் பறிப்பு திருடன்களை தேடி வருகின்றனர்.

அக் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ