உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செக்யூரிட்டிக்கு மரண அடி 4வது நபரை தேடும் போலீஸ் Mamallapuram Security beaten by 2 womens|

செக்யூரிட்டிக்கு மரண அடி 4வது நபரை தேடும் போலீஸ் Mamallapuram Security beaten by 2 womens|

செக்யூரிட்டிக்கு மரண அடி 4வது நபரை தேடும் போலீஸ் Mamallapuram Security beaten by 2 womens| சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் ஞாயிறன்று வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் கூட்டம் இருந்தது. ஐந்து ரதம் பகுதிக்கு காரில் வந்த 2 பெண்கள் உட்பட 4 பேர், நோ பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்த முயன்றனர். செக்யூரிட்டி ஏழுமலை தடுத்தார். பார்க்கிங் ஏரியாவுக்கு சென்று காரை நிறுத்துமாறு அறிவுறுத்தினார். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, காரில் இருந்து இறங்கிய பெண், ஏழுமலையை சரமாரியாக தாக்கினார். அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் ஸ்டிக்கை பிடுங்கி அது உடையும் வரை அவரை அடித்தார். இன்னொரு பெண்ணும் வந்து ஏழுமலையை காலால் எட்டி உதைத்தார். தம்மை தாக்கிய பெண்களை ஏழுமலையும் தாக்க முயன்றார். உடனே காரில் இருந்து இறங்கிய 2 ஆண்களும் சேர்ந்து ஏழுமலையை தாக்கினர். அங்கிருந்த சிலர் ஓடி வந்து தடுத்து, ஏழுமலையை காப்பாற்றினர். அதன்பின், நால்வரும் காரில் ஏறி சென்றுவிட்டனர். செக்யூரிட்டி ஏழுமலை தாக்கப்படுவதை சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டார். அந்த வீடியோ காட்டுத் தீயாய் பரவியது. செக்யூரிட்டி ஏழுமலை மீது தாக்குதல் நடத்தியோர் மீது, மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கார் நம்பரை வைத்து முகவரியை கண்டுபிடித்தனர். தாக்குதலில் ஈடுபட்ட முடிச்சூரை சேர்ந்த பிரபு இன்பதாஸ், கீர்த்தனா, மறை மலைநகரை சேர்ந்த சண்முக பிரியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மறைமலைநகர் கிருஷ்ணமூர்த்தியை போலீசார் தேடுகின்றனர்.

அக் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ