உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மதுரையில் திமுக எம்எல்ஏவை ரவுண்டு கட்டிய பெண்கள் | Madurai | MLA | Rain

மதுரையில் திமுக எம்எல்ஏவை ரவுண்டு கட்டிய பெண்கள் | Madurai | MLA | Rain

மதுரையில் திமுக எம்எல்ஏவை ரவுண்டு கட்டிய பெண்கள் | Madurai | MLA | Rain மதுரையில் பெய்த கனமழையால் செல்லூர் கட்டபொம்மன் நகர் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. பந்தல்குடி கால்வாய் நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மதுரை வடக்கு திமுக எம்எல்ஏ தளபதி வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட பகுதிக்குள் வராமல் எம்எல்ஏ ரோட்டில் நின்று பேசிவிட்டு கிளம்பிவிட்டார். உள்ளே வந்து பார்த்தால் தானே நாங்க படற கஷ்டம் அவருக்கு புரியும் என பெண்கள் ஆவேசமாக பேசினர். எம்எல்ஏ காலில் அடிபட்டிருக்கு. அதனால் தான் தண்ணீருக்குள் இறங்கி வரவில்லை என திமுக நிர்வாகிகள் சமாளித்தனர். அவர்கள் சொன்னதை ஏற்க மறுத்த பெண்கள் எம்எல்ஏ தளபதி காரை வழிமறித்து சராமாரியாக கேள்வி கேட்டனர். பெண்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் எம்எல்ஏ தளபதி அங்கிருந்து வேகமாக காரில் கிளம்பி சென்றார்.

அக் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை