உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பசும்பொன் தேவர் நினைவாலயத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் Pasumpon Thevar| Muthuramalinga thevar

பசும்பொன் தேவர் நினைவாலயத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் Pasumpon Thevar| Muthuramalinga thevar

ராமநாதபுரம் பசும்பொன்னில் வரும் 30ம் தேதி தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடக்கிறது. அக்டோபர் 28ல் ஆன்மிக விழாவாகவும், 29ல் அரசியல் விழாவாகவும், 30ல் அரசு விழாவாகவும் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். பசும்பொன் நினைவாலயத்தில் உள்ள தேவர் சிலைக்கு, 2014ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால், அதிமுக சார்பில் 13.7 கிலோ எடையுள்ள தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும் குருபூஜை, ஜெயந்தி விழாவின்போது தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவித்து பின் மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கி பெட்டகத்தில் வைக்கப்படும். இந்த ஆண்டும், வங்கி பெட்டகத்தில் இருந்து அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தேவர் நினைவாலைய பொறுப்பாளர் காந்திமீனாள் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வங்கி பெட்டகத்தில் இருந்து தங்க கவசம் எடுத்து வரப்பட்டது. பின், அனைவர் முன்னிலையிலும் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

அக் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ