தீபாவளி சந்தைகளில் ஆடு விற்பனை படுஜோர் Goats | Sold | Goats Sandhai| Tamilnadu |
தீபாவளி சந்தைகளில் ஆடு விற்பனை படுஜோர் Goats | Sold | Goats Sandhai| Tamilnadu | தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள ஆட்டு சந்தைகளில் பல கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்று தீர்ந்தன. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வார சந்தையில் 5 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்றதாக சந்தை குத்தகைதாரர்கள் தெரிவித்தனர். பென்னாகரம் சந்தைக்கு வரும் ஆடுகள் பெரும்பாலும் வனப்பகுதிகளில் வளர்க்கப்படுவதால் சுவை அதிகம் இருக்கும் என வியாபாரிகள் நம்புகின்றனர். அதனால், ஈரோடு, சேலம், திருப்பத்தூர் முதலான மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் பென்னாகரம் வந்து ஆடுகள் வாங்கிச் சென்றனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி பேளூரில் நடந்த வாரசந்தையில் சேலம் புறநகர், பெரம்பலூர், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராசிபுரம் முதலான ஊர்களில் இருந்து சுமார் 2 ஆயிரத்து 500 ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இங்கு, 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதால் ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்தனர்.