உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மனைவியுடன் தங்கியுள்ள மன்னர் பெறும் சிகிச்சை விவரம் Brittain | Prince | Charles | Bangaluru

மனைவியுடன் தங்கியுள்ள மன்னர் பெறும் சிகிச்சை விவரம் Brittain | Prince | Charles | Bangaluru

மனைவியுடன் தங்கியுள்ள மன்னர் பெறும் சிகிச்சை விவரம் Brittain | Prince | Charles | Bangaluru | Soukya Holistic Health Center | Whitefield| பிரிட்டன் மன்னர் சார்லஸ் பெங்களூருவில் உள்ள சௌக்யா சர்வதேச ஹோலிஸ்டிக் ஹெல்த் சென்டரில் புத்தாக்க சிகிச்சை பெறுவதற்காக கடந்த 27ம் தேதி வந்தார். தனிப்பட்ட பயணம் என்பதால் அவருடைய இந்திய வருகை குறித்து எந்த தகவல்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மன்னர் சார்லசுடன் மனைவி கமிலாவும் வந்துள்ளார். சௌக்யா ஹெல்த் சென்டரில் தினமும் காலை யோகாசனம் செய்யும் சார்லஸ் மற்றும் கமிலாவுக்கு புத்துணர்ச்சி சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன. நீண்ட நடைபயணம், இயற்கை வேளாண்மை முறைகளை பார்வையிடுதல் போன்றவற்றிலும் அவர்கள் கவனம் செலுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சௌக்யா ஹெல்த் சென்டரை சுற்றிலும் உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சௌக்யா ஹெல்த் சென்டர் டாக்டர் ஐசக் மத்தாய் என்பவரால் நிறுவப்பட்டது. பெங்களூரு புறநகரில் சமேதனஹள்ளி என்ற இடத்தில் உள்ளது. இங்கு, ஒருங்கிணைந்த மருத்துவ வசதி, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யோகா, இயற்கை மருத்துவம், அக்குபஞ்சர், ரெப்ளெக்சாலஜி சிகிச்சைக்கள் அளிக்கப்படுகின்றன. மன்னர் ஆன பின் சார்லஸ் பெங்களூரு வருவது முதல் முறை என்றாலும், இளவரசராக 9 முறை சௌக்யா ஹெல்த் சென்டருக்கு வந்து சிகிச்சை பெற்றுள்ளார். மன்னர் சார்லஸ் மற்றும் அவருடைய மனைவி கமிலா ஆகியோர் வயது மூப்பால் ஏற்படும் பிரச்னைகளுக்குரிய நோய் எதிர்ப்பு, நச்சு நீக்கம், புத்துணர்ச்சி முதலான ஆரோக்கிய சிகிச்சைகளை மேற்கொண்டதாக தெரிகிறது. சிகிச்சைகள் முடிந்து இன்று இரவு அவர் லண்டன் புறப்படுகிறார்.

அக் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை