உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடேங்கப்பா... தமிழகத்தை மலைக்க வைத்த தீபாவளி வியாபாரம் | diwali purchase video | Diwali 2024

அடேங்கப்பா... தமிழகத்தை மலைக்க வைத்த தீபாவளி வியாபாரம் | diwali purchase video | Diwali 2024

அடேங்கப்பா... தமிழகத்தை மலைக்க வைத்த தீபாவளி வியாபாரம் | diwali purchase video | Diwali 2024 இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி இன்று தமிழகம் உட்பட நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகை கொண்டாட புத்தாடை, பட்டாசு, இனிப்பு வகைகள், தங்க நகை, எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், மரச்சாமான்கள், காலணிகள், மளிகை, பூ, பழம், காய்கறிகள், பரிசு பொருட்கள் போன்றவற்றை ஒரு வாரமாக மக்கள் ஆர்வமுடன் வாங்கி வந்தனர். சென்னையில் தி.நகர், பிராட்வே, புரசைவாக்கம் என அனைத்து கடை வீதிகளிலும் கூட்டம் அலைமோதியது. இதே போல் கோவை, மதுரை, திருச்சி உட்பட மாநிலம் முழுதும் உள்ள நகரங்களில் வியாபாரம் அமோகமாக இருந்தது. கடைசி நாளில் நள்ளிரவுக்கும் மேல் விற்பனை நடந்தது. இது தவிர ஆன்லைன் வழியாக பலரும் பொருட்களை வாங்கினர். அதிலும் விற்பனை நன்றாக இருந்தது. தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் மட்டும் 50,000 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது தவிர ஆன்லைன் மூலம் 10,000 கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் பொருட்களை வாங்கி குவித்து இருக்கின்றனர். இதுகுறித்து தமிழக வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது: தமிழகத்தில் ஜவுளிக் கடை, மளிகைக் கடை, சாலையோர வியாபாரம் என அனைத்து வணிகத்திலும் 35 லட்சம் வணிகர்கள் ஈடுபட்டுஉள்ளனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு அனைத்து வகை வியாபாரமும் நன்கு நடந்துள்ளது. எனினும் ஆன்லைன் வழியாக 30 சதவீத வியாபாரம் நடந்ததால், உள்ளூர் வணிகர்களுக்கு விற்பனை பாதிக்கப்பட்டது. வரும் காலங்களில் உள்நாட்டு வணிகத்திற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

அக் 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ