பாகிஸ்தானை தெறிக்கவிட்ட மோடி பேச்சு | Modi on PAK | statue of unity | national unity day | diwali
பாகிஸ்தானை தெறிக்கவிட்ட மோடி பேச்சு | Modi on PAK | statue of unity | national unity day | diwali சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளான இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குஜராத் சென்ற மோடி அங்குள்ள சர்தார் வல்லபாயின் ஒற்றுமை சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு நடந்த பேரணியில் மோடி பேசினார். அவர் கூறியது: இந்த முறை ஒற்றுமை தினமும் தீபாவளி பண்டிகையும் ஒரே நாளில் வந்திருப்பது சிறப்பு. தீபாவளியை பல நாடுகள் கொண்டாட ஆரம்பித்து விட்டன. பல நாடுகளின் தேசிய பண்டிகையாகவும் மாறி விட்டது. இந்தியா ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இதை விரைவில் முழுமையாக நிறைவேற்றுவோம். ஒரே நாடு ஒரே தேர்தல் இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும். இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும். இந்தியாவின் வளர்ந்த நாடு கனவை அடைய புதிய வேகத்தை தரும். காஷ்மீரில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ அடியோடு புதைத்து விட்டோம். நாட்டின் பாதுகாப்பில் நிலவிய எல்லாவிதமான அச்சுறுத்தல்களையும் நீக்கி விட்டோம். குறிப்பாக 10 ஆண்டில் பாதுகாப்பை உறுதி செய்ய பெரிய அளவில் நடவடிக்கை எடுத்துள்ளோம். பயங்கரவாதிகளின் எஜமானர்களுக்கு இப்போது இந்தியாவை பற்றி நன்றாக தெரிகிறது. இந்தியாவை சீண்டினால் நம்மை சும்மா விடமாட்டார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். நாட்டின் வடகிழக்கில் நிலவிய எல்லை பிரச்சனைகளை பேச்சு, நம்பிக்கை மூலம் தீர்த்துள்ளோம். அசாம், மேகாலயா இடையேயான எல்லை பிரச்சனைகளையும் பெரிய அளவில் முடிவுக்கு கொண்டு வந்துவிட்டோம். உலக அளவில் பல நெருக்கடிகள் நிலவுகின்றன. போர் உள்ளிட்ட சூழல்களால் பல நாடுகள் பிரிந்து கிடக்கின்றன. ஆனால் எல்லா நாடுகளுமே இந்தியாவுடன் நெருக்கமான தொடர்பை உருவாக்கி வருகின்றன. உலக அரசியலில் இப்போது இந்திய பிடித்திருக்கும் உயரம் சாதாரணமானது அல்ல; இது ஒரு புதிய வரலாறு என்று மோடி சொன்னார்.