உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வான் பாதுகாப்பு அரணை பலப்படுத்தும் முயற்சி israel| anti missile defence system| iron beam| iron dome

வான் பாதுகாப்பு அரணை பலப்படுத்தும் முயற்சி israel| anti missile defence system| iron beam| iron dome

வான் பாதுகாப்பு அரணை பலப்படுத்தும் முயற்சி israel| anti missile defence system| iron beam| iron dome இஸ்ரேலின் புதிய ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பம் மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் ஒரே நேரத்தில் மூம்முனை போரை எதிர்கொண்டு வருகிறது. காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹெஸ்புலா, இவர்களுக்கு வளர்த்துவிடும் ஈரான் ஆகியோருக்கு எதிராக தாக்குதலை நடத்தி வருகிறது. 3 முனைகளில் இருந்து எதிரிகள் ஏவும் ஏவுகணைகள், ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை இஸ்ரேலின் அயர்ன் டோம் எனப்படும் வான் பாதுகாப்பு அமைப்பு இடையிலேயே மறித்து அழித்து விடுகிறது. இது உலகளவில் பேசப்படும் பாதுகாப்பு அரணாக இருக்கிறது. அயர்ன் டோம் சிஸ்டத்தில், உள்ள ரேடார், எதிரிகளின் ஏவுகணைகள் பல கிலோ மீட்டர் தூரத்தில் வரும்போதே அதை கண்காணித்து, இடைமறித்து தாக்கும் ஏவுகணையை அனுப்பி தாக்கி அழிக்கும். மொத்தமாக ஏவுகணைகள் வரும் சமயங்களில், ஒருசில ஏவுகணைகள் அயர்ன் டோம் சிஸ்டத்தையும் ஊடுருவி வந்து தாக்கியதும் உண்டு. இச்சூழலில், எதிரிகளின் ஒரு ஏவுகணை கூட தமது மண்ணில் விழக்கூடாது என்பதற்காக அயர்ன் பீம் iron beam என்ற புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளது. இது, லேசர் மூலம் எதிரியின் ஏவுகணைகளை அழிக்கும். அயன்டோம் சிஸ்டத்தை விட மின்னல் வேகத்தில் செயல்பட கூடியது. இதனால் எதிரிகளின் ஒரு ஏவுகணையை கூட விட்டு வைக்காது. பல கிலோ மீட்டர் தூரத்தில் வரும் ஏவுகணைகளையும் மிக துல்லியமாக தாக்கி அழிக்கும். அயன் டோம் சிஸ்டத்தில் இடைமறித்து தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு எதிர்ப்பு எவுகணை தயாரிக்கவும் 50,000 டாலர் செலவு செய்ய வேண்டியிருப்பதால், இந்த சிஸ்டத்தை செயல்படுத்துவதில் அதிக செலவாகிறது. ஆனால், அயர்ன் பீம் சிஸ்டத்தில், அதை நிறுவுவதற்கு மட்டுமே செலவாகும். பயன்பாட்டு செலவு என்பது அயர்ன் டோமை ஒப்பிடும்போது, செலவே இல்லை என்று சொல்லலாம். அயர்ன் டோமை வடிவமைத்துள்ள, ரபேல் நிறுவனம், இந்த புதிய முறையையும் வடிவமைத்துள்ளது. அடுத்த ஓராண்டில், இந்த புதிய ஏவுகணை தடுப்பு முறை பயன்பாட்டுக்கு வரும். இதற்காக, 4,460 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.

நவ 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை