உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சட்டசபை தேர்தலில் தவெக உடன் என் ஆர் காங் கூட்டணி?

சட்டசபை தேர்தலில் தவெக உடன் என் ஆர் காங் கூட்டணி?

சட்டசபை தேர்தலில் தவெக உடன் என் ஆர் காங் கூட்டணி? நடிகர் விஜய்க்கும், புதுச்சேரி முதல்வரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமிக்கும் நல்ல நட்பு உள்ளது. கட்சி ஆரம்பிப்பதற்கு முன், நடிகர் விஜய், ரங்கசாமியிடம் ஆசீர்வாதம் பெற்றுச் சென்றார். அதேபோல, விக்ரவாண்டியில் தவெக வின் முதல் மாநாட்டை நடிகர் விஜய் வெற்றிகரமாக நடத்தி முடித்ததும், ரங்கசாமி வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தார். இச்சூழலில், சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், தவெக கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகள் துவங்கி உள்ளன. என்ஆர்காங்கிரஸ் என்ற தனிக் கட்சியை துவங்கிய பின், புதுச்சேரியில் மட்டும் போட்டியிட்டு வரும் ரங்கசாமி, அம்மாநிலத்தை கடந்து தமிழகத்திலும் கட்சியை போட்டியிட வைக்க வேண்டும் என விரும்புகிறார். இதை, சில மாதங்களுக்கு முன் தன்னை சந்தித்த நடிகர் விஜயிடம், ரங்கசாமி கூறியிருக்கிறார். அதையடுத்து, வரும் 2026 சட்டசபைத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி சேர்ந்து தமிழகத்திலும் தேர்தலை சந்திக்கலாம் என விஜய் தரப்பில் தெரிவித்துள்ளனர். இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை ரகசியமாக நடந்து வருகிறது. பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து விட்டால், தமிழகத்தின் கடலுாரில் பிரமாண்ட மாநாடு ஒன்றை நடத்தவும் ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

நவ 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை