மலைப்பாதையில் பஸ் சென்றபோது துயர சம்பவம் Uttarakhand bus accident
மலைப்பாதையில் பஸ் சென்றபோது துயர சம்பவம் Uttarakhand bus accident| 36 dead in bus accident in Uttarakhand| Almora bus fell in to the gorge உத்தரகாண்ட் மாநிலம் பவுரியில், இருந்து ராம்நகருக்கு பஸ் சென்று கொண்டிருந்தது. 50 பேர் பயணித்தனர். அம்மோரா மாவட்டத்தின் மலைப்பாங்கான ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, திடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது. பஸ் உருண்டு விழும் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பேரிடர் மீட்பு குழுவினர், போலீசாரும் வந்தனர். இந்த விபத்தில் இதுவரை 36 பேர் இறந்தனர். படுகாயம் அடைந்தோர் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம், ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலர் சீரியசாக உள்ளனர். லேசான காயமடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். விபத்து குறித்து அறிந்ததும், முதல்வர் புஷ்கர் சிங் தாமி, டில்லியில் இருந்து ரிஷிகேஷ் விரைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். இறந்தவர்கள் குடும்பத்துக்கு மாநில அரசு 4 லட்சம் ரூபாயும், மத்திய அரசு 2 லட்சம் ரூபாயும் நிவாரணம் அறிவித்தது. காயமடைந்தோருக்கு மாநில அரசு 1 லட்சமும், மத்திய அரசு 50 ஆயிரம் ரூபாயும் அறிவித்துள்ளது. இறந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி முதல்வர் புஷ்கர் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.