சேலம் பஸ் ஸ்டாண்டில் நடந்தது என்ன? salem bus stand woman arrested woman
சேலம் பஸ் ஸ்டாண்டில் நடந்தது என்ன? salem bus stand woman arrested woman attacked sub inspector with footwear chappal 3 arrested salem police crime தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை உள்ளிட்ட பிற நகரங்களுக்கு செல்ல ஆயிரக்கணக்கான மக்கள் சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் நேற்று குவிந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் புதிய பஸ் நிலையத்துக்குள் தனியார் வாகனங்களை போலீசார் அனுமதிக்கவில்லை. ஆனால் இரவு 9 மணிக்கு சூரமங்கலம் ஆண்டிபட்டியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காரில் மேம்பாலம் வழியாக பஸ் ஸ்டாண்டுக்குள் வந்தனர். அங்கிருந்த போலீசார் இறங்க வேண்டாம்; காரை வெளியே நிறுத்துங்கள் என கூறினர். அதையும் மீறி காரில் இருந்தவர்கள் இறங்கி உள்ளனர். உடனே எஸ்ஐ சரவணவேலன் கார் டிரைவரை சத்தம் போட்டார். காருக்குள் இருந்த கமலேஸ்வரி உட்பட 3 பேர் எஸ்ஐ சரவணவேலனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, காரில் இருந்தவர்களை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சண்டை வலுத்தது. தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும்படி காரில் இருந்தவர்கள் கோஷமிட்டனர். பயணிகள் கூடி விட்டனர். பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு ஏற்பட்டது. நாளை காலை பேசிக் கொள்ளலாம் என, காரில் இருந்தவர்களை போலீசார் சமரசப்படுத்தினர். அப்போது, ஆவேசமான கமலேஸ்வரி எஸ் ஐ சரவணவேலனை செருப்பால் அடித்துள்ளார். எஸ்ஐ புகாரின்பேரில் கமலேஸ்வரி, அவரது அண்ணன் கார்த்திக் மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மூவர் மீதும் ஐந்து பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.